நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (Clerk) பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10,277 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தமிழகத்துக்கே தனியாக 894 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை இன்று (ஆகஸ்ட் 1) முதல் துவங்குகிறது. விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் www.ibps.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் மாதத்தில் முதல்நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நவம்பரில் முக்கிய தேர்வும் நடத்தப்படும்.
இத்தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவோர் இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் எழுத்தராக பணியமர்த்தப்படுவார்கள். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தவறவிடாமல் விண்ணப்பிக்குமாறு வங்கிகள் பணியாளர்கள் தேர்வு நிறுவனம் (IBPS) கேட்டுக்கொண்டுள்ளது
