கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், குடும்ப வன்முறை காரணமாக ஒரு கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்ட பரிதாபமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூரைச் சேர்ந்த ஃபசீலா (வயது 23), தனது கணவர் நௌஃபல் மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஜூலை 29ஆம் தேதி, அவருடைய கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஃபசீலா சடலமாக மீட்கப்பட்டார்.

தற்கொலைக்கு முன் தாய்க்கு வாட்ஸ்அப் செய்தி ஒன்றை அனுப்பியிருந்த ஃபசீலா, அதில் தானைச் சுற்றியுள்ள வன்முறைகள் மற்றும் தொல்லைகள் குறித்து எழுதியிருந்தார். இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஃபசீலா, கணவர் நௌஃபல் தனது வயிற்றில் பலமுறை உதைத்ததாகவும், அவரை கொலை செய்வதாக மிரட்டியதாகவும் அந்த செய்தியில் கூறியுள்ளார். மேலும், தனது கையை முறித்ததாகவும், மாமியார் ரம்லாவும் தொடர்ச்சியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் தானே உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு வந்தேன்” எனக் கூறியிருந்தார் ஃபசீலா.

இச்சம்பவம் தொடர்பாக, ஃபசீலாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், திருச்சூர் போலீஸார் வழக்குப் பதிந்து, நௌஃபல் மற்றும் அவரது தாய் ரம்லாவை கைது செய்து நீதிமன்றக் காவலில் ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவம், குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஏற்கனவே முதலில் ஒரு குழந்தை இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமான நிலையில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.