பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் புரட்சி தலைவரான ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாஜக-அதிமுக கூட்டணி கடந்த சில மாதங்களாக வலுப்பெற்று வந்த நிலையில், அதில் ஓபிஎஸ் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதாக அவரது தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஓபிஎஸ் வெளியேறியதற்கு பின்னணியாக, அதிமுக-பாஜக கூட்டணிக்குள் தன்னை புறக்கணிக்கும் முயற்சிகள் தொடர்ந்தது தான் காரணம் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பை தொடங்க உள்ளதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்துள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்திக்க உள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் இல்லத்தில் இங்கு சந்திப்பு நடைபெற உள்ளது. இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கிங் சென்றபோது ஓபிஎஸ் சந்தித்து பேசினார். தற்போது மீண்டும் அவரை சந்திக்க உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
