12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி சில மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்பதற்காக மகளுடன் சேர்ந்து அவரது தாயும் வந்தபோது மகளின் துணைக்காக தாய் வந்திருக்கிறார் என எண்ணிய நிலையில் அவரும் கலந்தாவில் பங்கேற்றுள்ளார்.

அப்போதே மகள் உதவியுடன் வெற்றி பெற்று தாயும் சேர்ந்து மருத்துவம் படிப்பதற்காக கலந்து கொண்டுள்ளார் என தெரியவந்தது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 49 வயதாகும் இவர் பிஸியோ தெரபிஸ்டாக வேலை பார்த்து வந்தார். இவர் தன் மகள் நீட் தேர்வுக்காக தயாராகி கொண்டிருக்கும் போது அவருடன் சேர்ந்து படித்து இவரும் நீட் தேர்வு எழுதியுள்ளார்.

இவர் தேர்வில் 147 மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், இவர் மாற்று திறனாளி என்பதால் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அவருக்கு மருத்துவம் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது‌. எனவே அவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்க தேர்வு செய்துள்ளார். இது குறித்து அவர்  கூறியதாவது, கடந்த 15 வருடங்களுக்கு முன்பு எனக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தபோது படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே இப்போது என் மகளின் மூலமாக என்னுடைய கனவை நிறைவேற்றிக் கொள்கிறேன். ஆனால் இருவரும் ஒரே மருத்துவக் கல்லூரியில் படிக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் எனக் கூறியுள்ளார். இவரது மகள் கிருபாளினி 460 மதிப்பெண் பெற்று பொது கலந்தாய்வில் கலந்து கொண்டுள்ளார். எனவே இவருக்கும் மருத்துவம் படிப்பதற்கான இடம் கிடைக்க வாய்ப்பு உள்ள நிலையில் இருவரும் சேர்ந்து ஒரே ஆண்டில் மருத்துவ படிப்பில் நுழைய உள்ளனர்.