2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தொடர்பான வீடியோக்கள் மீண்டும் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு கடல் கொந்தளித்து எழுந்த சுனாமி அலைகள், பல நகரங்களில் உள்ள வீடுகள், வாகனங்கள், கப்பல்கள் அனைத்தையும் தண்ணீரில் மிதக்கவைத்தது.

சாலைகளில் கப்பல்கள் மிதந்தன, தெருக்களில் படகுகளும் வாகனங்களும் ஒன்றாக ஓடின. இந்த சுனாமி மட்டும் 19,000க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த பேரழிவாகும்.

நிலநடுக்கம் கடலடியில் சுமார் 300 கி.மீ நீளமும் 150 கி.மீ அகலமும் கொண்ட பெரிய விரிசலை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கடலில் தண்ணீர் கடுமையாக கலங்கி, சுனாமி அலைகள் உருவானது. சில நிமிடங்களிலேயே நகரங்களில் தண்ணீர் வெள்ளம் போல் புகுந்தது. மக்கள் விரைவாக வெளியேறியபோதிலும், பெரும்பாலானோர் பாதுகாப்பாக செல்ல முடியவில்லை. சுனாமிக்கு முன் ஒலிக்கப்பட்ட எச்சரிக்கை சைரன்கள் மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகளும் சிலரின் உயிரைக் காக்க தவறின.

“>

 

1900ஆம் ஆண்டுக்குப் பிறகு, இது உலகின் மிகக் கடுமையான பூகம்பங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது, ரஷ்யாவில் ஏற்பட்ட பூகம்பத்தையும் அடுத்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள சூழலில், மக்கள் மீண்டும் 2011 சுனாமியின் நினைவுகளை மீட்டுள்ளனர்.

“>

 

அந்த சுனாமியின் நேரடி வீடியோக்களில், எவ்வாறு நகரம் முழுவதும் மெதுவாக தண்ணீரால் மூடப்பட்டு, இயலாமையில் மக்கள் தவித்தனர் என்பதைக் காண முடிகிறது. இது மீண்டும் ஒரு முக்கியமான எச்சரிக்கையாக சமூகத்தில் பரவி வருகிறது.