சீனாவின் நான்ஜிங் நகரை பரபரப்பில் ஆழ்த்திய ‘சிஸ்டர் ஹாங்’ பாலியல் மோசடி விவகாரம் தற்போது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பெண்மாதிரி நடித்து வலைவீசிய ‘சிஸ்டர் ஹாங்’ என்ற நபர், “நான் திருமணமான பெண், பணம் வேண்டாம், வெறும் மகிழ்ச்சிக்காக” எனக் கூறி பலரை வீடியோ கால் மூலம் வீட்டிற்கு வர அழைத்துள்ளார்.

இதை நம்பிய பலர் கையில் பால் பாக்கெட், கடலை உருண்டை, மளிகைப் பொருட்களுடன் அவரின் வீட்டை நோக்கி சென்றுள்ளனர். வீட்டிற்கு வந்த ஆண்கள், அந்த ‘சிஸ்டர் ஹாங்’ உண்மையில் ஒரு ஆணாக இருப்பதை பின்னரே அறிந்துள்ளனர். மேலும், அவர்களுக்குத் தெரியாமல் அவர்களை நிர்வாணமாக வீடியோ எடுத்த அந்த நபர், அந்தக் காணொளிகளை டிக்டோக், வெய்போ, எக்ஸ் (முன்னைய ட்விட்டர்), டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கசியவிட்டுள்ளார்.

இதனால், அந்த ஆண்களின் நண்பர்கள், உறவினர்கள் காணொளிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் TikTok-ல் பிரபலமான ‘ரெட் அங்கிள்’ என்பதும், மலிவான விக், லிப்ஸ்டிக், கேமரா பில்டர் போன்றவற்றை பயன்படுத்தி பெண்மாதிரியாக நடித்து பலரை ஏமாற்றியது தெரியவந்தது.

அதோடு, அந்த ஆண்களின் வீடியோக்களை சில ஆபாச தளங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதுவரை 1,692 ஆண்களை ஏமாற்றியதாக அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தின் தீவிரம் அதிகரிக்க, சுகாதாரத் துறையும் இதில் தலையிட்டு நான்ஜிங் நகரம் முழுவதும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தியது.

இந்த சோதனைகளில் மூன்று பேருக்கு எய்ட்ஸ் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டு முழுவதும் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலைமை பொழுது, இந்த ‘சிஸ்டர் ஹாங்’ விவகாரம் சீனாவை மட்டுமின்றி உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உருவெடுத்து வருகிறது.