உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் புகழ்பெற்ற மானசாதேவி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக குவிந்தனர்.
அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக ஆறு பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஏராளமானோர் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதற்கான காரணம் குறித்த தற்போது விசாரணை நடைபெறும் நிலையில் இந்த சம்பவம் அங்கு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
