பிரதமர் மோடி வருகிற 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் தமிழகத்திற்கு வருகிறார். 26 ஆம் தேதி மாலத்தீவில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து அங்கு விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். அன்று இரவு திருச்சி செல்கிறார்.

பின்னர் 27ஆம் தேதி கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் நடக்கும் ஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொண்டு பகல் 2.25 மணிக்கு திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க திட்டமிட்டதாக கூறப்பட்டது.

பாஜகவுடன் கூட்டணி ஏற்பட்ட பிறகு எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை இதுவரை சந்திக்கவில்லை இந்த சூழலில் இன்று செய்தியாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம், பிரதமர் மோடியின் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பிரதமர் மோடியை சந்திக்கும் நேரம் இன்னும் உறுதியாகவில்லை. தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமரின் பயணத்திட்டம் இன்னும் முழுமையாக தெரியவில்லை என கூறியுள்ளார்.