தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளில், இதயத் துடிப்பில் ஏற்பட்ட சில வேறுபாடுகள் காரணமாகவே தலைசுற்றல் ஏற்பட்டது என மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உடல்நிலை நிலையாக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவ குழுவின் கண்காணிப்பில் சிகிச்சை பெறுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், முதல்வர் ஸ்டாலின் விரைவில் பூரண நலமுடன் திரும்ப வேண்டும் என தனது X  தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார். விஜயின் இந்த மனிதநேய வாழ்த்து அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பாராட்டை பெற்றுவருகிறது.

“>