நடப்பு ஆண்டு 2025 ஆம் ஆண்டிற்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் இந்தியா 8 இடங்கள் முன்னேறி, 77 வது இடத்தைப் பெற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த முன்னேற்றமானது கடந்த 6 மாதங்களில் எந்த நாடும் காணாத முன்னேற்றம் ஆகும். இந்த வருடத்தின் தொடக்கத்தில் இந்தியா 85 வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 77 வது இடத்தை பெற்றுள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலம் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் வாய்ப்பு உள்ளது.
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு லண்டனை தளமாக கொண்ட நிலையில், ஒரு நாட்டில் உள்ள குடிமக்களின் பாஸ்போர்ட் அவர்கள் விசா இல்லாமல் பயணிக்கும் நாடுகளின் எண்ணிக்கையை தரவரிசைப்படுத்தும் வகையில் உள்ளது. இதைத்தொடர்ந்து இந்தோனேசியா, மாலத்தீவுகள், தாய்லாந்து, மலேசியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூர் வலிமையான பாஸ்போர்ட் பட்டியலில் உலக அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளநிலையில், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருந்தால் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இதை தொடர்ந்து பிரான்சு, டென்மார்க், அயர்லாந்து, பின்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் இருந்தால் விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு பயணிக்க முடியும். மேலும் சமீபத்தில் வெளியான ஹென்லி பாஸ்போர்ட் பட்டியலில் அமெரிக்கா 10 வது இடத்திற்கு சரிந்த நிலையில், இங்கிலாந்து 6 வது இடத்திற்கு சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
