மொபைல் செயலியில் லுடோ விளையாட்டை பணம் வைத்து விளையாடியதால், ரூ.5 லட்சம் இழந்த 23 வயது இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் தெலங்கானாவின் மஹ்பூப்நகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. வெங்கடேஷ் (வயது 23) கடந்த நான்கு ஆண்டுகளாக ஹைதராபாத் நகரில் உள்ள ரோஸ்ட் கஃபே என்ற உணவகத்தில் தோட்டக்காரராக வேலை பார்த்து வந்தார்.
வெங்கடேஷ், ஒரு ஆன்லைன் கேமிங் செயலியில் லுடோ விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் பணம் வைத்து விளையாடும் வகையில் செயலி இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து விளையாடியதில் அவர் ரூ.5 லட்சம் வரை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த பெரிய நிதி இழப்பால் மனமுடைந்த வெங்கடேஷ், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை குடும்பத்தினரையும் நண்பர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
యువకుడి ప్రాణాలు తీసిన లూడో గేమ్
ఆన్లైన్లో లూడో గేము ఆడి.. రూ.5 లక్షలు నష్టపోవడంతో యువకుడి ఆత్మహత్య
మహబూబ్నగర్ జిల్లా నర్వ మండలం జాక్లెర్ గ్రామంనుండి 4 ఏళ్ల క్రితం హైదరాబాద్కు వచ్చి, రోస్ట్ కేఫ్లో తోటమాలిగా పనిచేస్తున్న గడ్డమీడి వెంకటేష్(23) అనే యువకుడు
ఒక యాప్లో లూడో… pic.twitter.com/SiFtqVvW0O
— Telugu Scribe (@TeluguScribe) July 23, 2025
“>
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயதில் ஆன்லைன் கேமிங் செயலிகளால் ஏற்படும் உயிரிழப்பு சம்பவம் மீண்டும் கவலையை கிளப்பியுள்ளது.
