நடிகையும், சமூக வலைதளங்களில் தீவிரம் காட்டும் பிரபலமும் ஆன உர்ஃபி ஜாவேத், தனது லிப் ஃபில்லரை அகற்றியதும், அதனால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலியுடன் காணப்படும் வீடியோவையும் புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வெளியானதிலிருந்து, ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் உருவாக்கியுள்ளது. “இது ஃபில்டர் அல்ல… 18வது வயதில் செய்ததை  இப்போதுதான் அகற்றுறேன்” என உர்ஃபி பதிவிட்ட குறிப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

லிப் ஃபில்லர் (Lip Filler) என்பது ஒரு அழகு சிகிச்சை முறையாகும். இது:

உதட்டுகளை மொத்தமாகவும்,
அழகாகவும்,
தொடர்ச்சியாகவும்
காண செய்வதற்காக, மருத்துவ முகவரிகள் (dermal fillers) மூலம் உதட்டுகளில் ஊசி மூலம் ஒரு வகை ஜெல் (பொதுவாக Hyaluronic Acid) செலுத்தப்படும்.

இது உதட்டை:

உப்பிய மாதிரி மென்மையாகவும்

பெரியதாகவும்

வடிவமைக்கப்பட்ட அழகாகவும்
மாற்றுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

“>

வீடியோவில், டாக்டர் ஒருவர் அவரது உதட்டில் மருந்து செலுத்துவதும், உர்ஃபி வலியுடன் சிரிப்பதையும் காண முடிகிறது. “இப்போ இயற்கையான தோற்றம் தான் விருப்பம்… ஆனா இன்னும் ஒரு வாரத்துக்குள் திரும்ப பண்ணுவேன். இந்த முறை சீராக, மென்மையான ஃபில்லர் தான் பண்ணுவேன்” என உர்ஃபி கூறியுள்ளார். இவர் இந்த சிகிச்சையை டாக்டர் ரிக்சன் என்பவரிடம் மேற்கொண்டதாகவும், அவரை “சிறந்த நிபுணர்” எனவும் பாராட்டியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

“>

இந்த பதிவுக்குப் பின்னர், உர்ஃபியின் நேர்மையும் தைரியமும் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. “இது மாதிரியான சிகிச்சை பின் விளைவுகளை பகிர்ந்து, நிஜத்தை வெளிப்படுத்துறதுக்கு அதிக நம்பிக்கையும் மன உறுதியும் தேவை” என ஒருவர் தெரிவித்துள்ளார். “உங்க இயற்கையான அழகே போதும், மீண்டும் ஃபில்லர் பண்ணாதீங்க” என மற்றொரு ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார். அழகு குறித்த சமூக எதிர்பார்ப்புகளுக்கு எதிராக உர்ஃபியின் வெளிப்பாடு, பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.