உலகிலேயே மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் உலகில் நம்பர் ஒன் மின்சார கார் தயாரிப்பு நிறுவனம் ஆகும். அந்த நிறுவனத்தின் கார்கள் அதிக அளவில் அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது.

அந்த காருக்கு சார்ஜ் போடுவதற்கான நிலையங்கள் அமெரிக்காவில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சார்ஜ் போடும் நேரத்தை வாகன ஓட்டிகள் வீணடிக்காமல் இருப்பதற்காக தொழிலதிபர் எலான்  மஸ்க் புதிய உணவருந்தும் நிலையத்தை திறந்து உள்ளார்.

அதாவது வாகன ஓட்டிகள் காருக்கு சார்ஜ் போடும் நேரத்தை வீணடிக்காமல் உணவு அருந்துவதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் பயண நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்ற வகையில் “டெஸ்லா டின்னர்” என்ற உணவருந்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் டெஸ்லா  நிறுவனம் டெஸ்லா டின்னரை தொடங்கியுள்ளது. இதன் படி காருக்கு சார்ஜ் செய்ய நினைக்கும் வாகன ஓட்டிகள் அதற்கு முன்னதாகவே உணவு தேவை என்றால் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

அதன்படி சார்ஜ் போடும் நேரத்தில் உணவு சாப்பிடலாம். மேலும் உணவகத்திற்கு சென்று சாப்பிடும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய யுக்தி வெற்றி பெற்றால் உலக அளவில் விரிவுபடுத்த எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.