சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கியுள்ள ‘கூலி’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில், நடிகர்கள் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக திரையிடப்பட உள்ளது. முன்னதாக வெளியான ‘மோனிகா’ என்ற பாடல், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பாடலின் இசையும், வரிகளும் இசை ரசிகர்களை மனதை வசப்படுத்தியுள்ளன.
Loop mode ON! #PowerHouse streaming now on your favourite audio platforms ⚡💥
🎵 https://t.co/dPvTu48GXq#Coolie worldwide from August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @Arivubeing #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan… pic.twitter.com/qpBbqhJYaE
— Sun Pictures (@sunpictures) July 22, 2025
“>
இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘Power House’ இன்று (ஜூலை 22) இரவு 9.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற உள்ள ஒரு சிறப்புவிழாவில் வெளியிடப்படவுள்ளது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் பங்கேற்க உள்ளதாகவும், இந்த பாடலும் முன்னதாக வெளியான பாடலைப் போலவே சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘கூலி’ திரைப்படம், ரஜினியின் பாணி, லோகேஷின் இயக்கத்திறமை, அனிருத் இசை மற்றும் ஸ்டார் காஸ்ட் ஆகியவற்றால் திரையுலகத்தில் பண்டிகை சூழலை உருவாக்கி, ரசிகர்களிடையே முக்கிய இடத்தைப் பெறும் படமாக உருவாகி வருகிறது.
