தமிழகத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஜாமீன் வேண்டி தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு தரப்பிலிருந்து பாலியல் துன்புறுத்தலை தடுத்தல், மாணவிகள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகளை பாதுகாத்தல், பாலியல் குற்றங்கள் தொடர்பாக தண்டனை நடவடிக்கைகள் உள்ளடக்கிய சிறப்பு சட்டத்தை இயக்க முடிவு செய்துள்ளாக கூறப்பட்டது.
இந்த புதிய சட்டம் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. அதனை கேட்ட நீதிபதி ராமகிருஷ்ணன் இந்த புதிய சட்டம் பெண்கள் நலன் கருதி தமிழக அரசு கொண்டு வந்ததை குறித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் விவரங்களை தாக்குதல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி இந்த வருட அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
