திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே புதூர் கிராமத்தில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில் திருமணம் ஆகி கலைச்செல்வி (38) என்ற மனைவியும் 8 வயதில் மகள் மற்றும் 5 வயதில் மகனும் இருந்துள்ளனர்.

இதில் முத்துகிருஷ்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததால் அவருடைய மனைவி இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இவருக்கு கடன் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனையில் இருந்த நிலையில் பின்னர் தன்னுடைய குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 19ஆம் தேதி இரவு தன்னுடைய இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு கலைச்செல்வியும் விஷம் குடித்தார். அவர்கள் மூவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று கலைச்செல்வி உயிரிழந்தார்.

அவருடைய மகன் மற்றும் மகள் இருவரும் உடல்நலம் தேறி வருவதாக டாக்டர்கள் கூறியுள்ள நிலையில் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.