அமெரிக்காவில் பாஸ்டனில் நடைபெற்ற கோல்ட்பிளே இசை நிகழ்ச்சியில் நடந்த ஒரு நிமிட நிகழ்வு தற்போது கம்ப்யூட்டர் உலகத்தையும், கார்ப்பரேட் உலகத்தையும் சுழற்சியில் ஆட வைத்துள்ளது. ஆஸ்ட்ரோனமர் என்ற டேட்டா தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஆண்டி பய்ரன் மற்றும் அந்த நிறுவனத்தின் மாநில தலைமை மனிதவள அதிகாரி (CPO) கிறிஸ்டின் காபட் கோல்ட்பிளே கான்சர்டில் ஒருவருக்கொருவர் அருகில் இருந்தபோது, ஜம்பர் ட்ரான் கேமரா அவர்களை கவனித்தது.

அந்த நேரத்தில் Chris Martin மேடையில் பாடலை நிறுத்தி “இவர்கள் காதலிக்கிறாங்களா, இல்லை வெறுமனே வெட்கப்பட்டவங்களா?” என சிரிப்போடு பேசினார். அந்த நொடி, ஆண்டி பய்ரன் தலைக்கீழாக நழுவி மறைய முயன்றதும், கிறிஸ்டின் காபட் முகத்தை கை கொண்டு மூடிக்கொண்டதும், இணையதளத்தை தீப்பற்ற செய்தது.

இந்த வீடியோ வைரலானதும் பல பிரபல பிராண்டுகள் சாட்கிளிப் எடுத்துவிட்டன. IKEA நிறுவனம் ஒரு பாண்டா ஒரு அரங்குட்டனை பின்னால் கட்டியபடி இருக்கும் பொம்மையை “Drama-free cuddles – HR approved” என்ற வார்த்தையுடன் வெளியிட்டது. Tesla, “நீங்கள் உங்கள் கார் சர்வீஸ்ல இருக்கும்போது, லோனர் டெஸ்லா வச்சு ஜாலியா படம் போட்டா… அது கோல்ட்பிளே கான்சர்ட்கு கூட்டிப் போற மாதிரி தான். உங்கள் காருக்கு தெரியும்!” என ஏளனமாகக் கூறியது.

GlobeAir என்ற ஜெட் சர்வீஸ், “கோல்ட்பிளே கான்சர்ட் முடிஞ்ச உடனே Boston-லிருந்து ஹவாய்க்கு விரைவாக தப்பிச் செல்லும் வழி” என கிளிப் வெளியிட்டது. Frido மெட்ரஸ் நிறுவனம், “அந்த வெட்கத்துக்குள்ள ஆகாம இருக்க, எங்களோட cuddle pillow இருந்தா போதுமே!” என ஆண்டி பய்ரனை பொம்மையில் பதித்தது.

Ryanair நிறுவனம் தனது ஹாச்யமான பாணியில், “Coldplay, Ryanair – இரண்டுமே ஜோடிகளை பிரிக்குது” என எச்சரிக்கையுடன் அந்த வீடியோவை ஷேர் செய்தது. Hulu ஸ்ட்ரீமிங் நிறுவனம் Modern Family சீரியலில் Phil Dunphy தன்னோட மாமியாரோடு kiss cam-ல் சிக்கிற காட்சி ஒன்றை வெளியிட்டு, “ஜம்பர் ட்ரான்ல நடக்கறது அங்கதான் முடிஞ்சிடும் அப்படினு யாரும் நம்பாதீங்க” என பதிவிட்டது.

அதிர்ச்சியைத் தொடர்ந்து CEO பதவியை ராஜினாமா செய்த பய்ரன்!

இந்த சம்பவத்துக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் ஏற்பட்ட அதிரடி விமர்சனங்கள் காரணமாக, ஜூலை 19ம் தேதி, ஆண்டி பய்ரன் தனது CEO பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்குப் பதிலாக நிறுவனத்தின் நிறுவுநருமான மற்றும் தயாரிப்பு தலைவரான பீட் டி.ஜாய் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்த சம்பவம், கார்ப்பரேட் உலகத்தில் தனியுரிமை எப்போது ஊடுருவலாக மாறும் என்பதற்கான புது உதாரணமாகவே பார்க்கப்படுகிறது. ஒரே நிகழ்ச்சி, ஒரே நொடி – ஆனால் விளைவுகள் உலகளாவிய அதிர்வை ஏற்படுத்தியதாக சமூக வலைத்தளங்கள் தெரிவிக்கின்றன.