இமாச்சல் பிரதேசத்தில் நடந்த ஒரு திருமணம் தற்போது மிகவும் ஆச்சரியமாக பேசப்படுகிறது. அதாவது சர்மூர் மாவட்டத்தில் ட்ரான்ஸ் கிரி என்ற பகுதி உள்ளது. இங்கு ஹாட்டி சமூகத்தை சேர்ந்த 2 சகோதரர்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்துள்ளனர்.
அதாவது பிரதீப் நேகி மற்றும் கபில் நேகி ஆகியோர் சகோதரர்கள். இவர்கள் சுனிதா சௌகான் என்ற பெண்ணை குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் தங்கள் சமூகத்தின் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். இந்த சமூகத்தில் பொதுவாக ஜோடிதரன் மற்றும் திரௌபதி பிரதா என்ற பெயரில் இதுபோன்று திருமணம் முறைகள் நடைபெறுவது வழக்கம்.
பொதுவாக இந்த திருமணங்கள் ரகசியமாக நடைபெறும் நிலையில் தற்போது தான் பிரம்மாண்டமாக உலகிற்கு தெரியும் வகையில் ஒரு திருமணம் அரங்கேறியுள்ளது. இந்த திருமணம் குடும்ப ஒற்றுமையை பிரதிபலிப்பதற்கும் மூதாதையர் வழக்கத்தை பின்பற்றுவதற்காகவும் பெண்கள் விதவை ஆவதை தடுப்பதற்காகவும் செய்யப்படுகிறது.
இது பற்றி சுனிதா கூறும் போது முழு சம்மதத்துடன் தான் இருவரையும் திருமணம் செய்து கொண்டேன். இதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார். மேலும் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருமண விழாவில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
