இன்றைய சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஜேசிபி போன்ற கனரக வாகனங்களை இயக்குவது கடினமாக இருக்கும்போது, ஒருவர் மூன்று சக்கரங்களில் JCBயை இயக்கி அனைவரையும் வாயடைத்துப் போகச் செய்துள்ளார்.
இந்த வீடியோவில், JCBவின் பின்புற சக்கரங்கள் இல்லாத நிலையில், அந்த வாகனத்தை வேகமாகவும், சமநிலையை குலைக்காமல் ஓட்டும் அந்த நபரின் திறமையைப் பார்த்து மக்கள் பெரிதும் பிரமித்துள்ளனர்.
तीन पहियों के साथ सड़क पर JCB दौड़ते दिखा ड्राइवर pic.twitter.com/XF7GYK0qNa
— Viral Beast (@kumarayush084) July 19, 2025
“இந்த செயலை எப்படி சாத்தியமாக்கினார்கள்?” என்ற கேள்வி பலரது மனதிலும் எழ, அந்த நபர் தனது நுட்ப அறிவையும், இயற்பியல் அறிவியலையும் பயன்படுத்தியதால்தான் இந்த அதிர்ச்சி அளிக்கும் செயல் சாத்தியமானது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆயிரக்கணக்கானோர் லைக் செய்தும், லட்சக்கணக்கானோர் பார்த்தும் வருகின்றனர். பலரும் “இந்த நபர் இயற்பியலை இப்படித்தான் பயன்படுத்தறார்”, “அண்ணா! மூளைப்பயன்பாடு என்றால் இதுதான்!” என கமெண்ட் செய்து வருகின்றனர்.
