கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வனிதா (29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகத்குரு (32) என்பவருடன் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். இதில் ஜெகத்குரு ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டதால் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக இருவரும் பிரிந்தனர்.
இதில் வனிதா தன் மகன்களுடன் பெற்றோர் வீட்டில் இருந்த நிலையில் தற்போது ஜெகத்குரு தன் மனைவி மற்றும் குழந்தைகளை சமாதானப்படுத்தி அழைத்து செல்வதற்காக அங்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவரது மனைவி இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் பின்பு தான் விவரம் தெரியவந்தது.
அதாவது வனிதாவுக்கு கொத்தனார் ஆன பிரபாகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அது கள்ளக்காதலாக மாறி பின்னர் இருவரும் கணவன் மனைவி போல் ஒன்றாக வாழ தொடங்கியுள்ளனர். பிரபாகரன் தன் மனைவியை மீட்டு தருமாறு போலீசில் புகார் கொடுத்த நிலையில் வனிதா கள்ளக்காதலனுடன் வாழ்வின் என்பதில் உறுதியாக இருந்தார். இதன் காரணமாக அவரது கணவன் தன் மனைவி அவருடன் இருக்கட்டும் என கூறிவிட்டு தனி மகன்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு கண்ணீரோடு அங்கிருந்து சென்றார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
