தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து. இவர் தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் ஆவார். இதில் முக முத்து கருணாநிதியின் மூத்த மனைவி பத்மாவதியின் மகன் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் வெளியான பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் மற்றும் அணையா விளக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு 77 வயது ஆகும் நிலையில் தற்போது வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
