நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாக இருக்கும் 6215 காலி பணியிடங்களை நிரப்புவதாக வங்கிப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் probationary officer’s, specialist officers, local bank officers பிரிவுகளில் மாநிலங்கள் வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு தகுதி உள்ளவர்கள் ஜூலை 24ஆம் தேதிக்குள் www.ibps.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிகளுக்கு ஜூலை 1 2025 நிலவரப்படி 20 முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசாங்க உத்தரவுப்படி வயது தளர்வுகள் பொருந்தும். இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு SC, ST, PWBD விண்ணப்பதாரர்களுக்கு 175 ரூபாய் கட்டணமும், மற்றவர்களுக்கு 850 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் தேர்வில் பெரும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் மாத சம்பளம் பதவி மற்றும் அனுபவம் போன்றவைகளை பொறுத்து ரூ.48480 முதல் ரூ.85920 வரையில் வழங்கப்படும்.