காங்கிரஸ் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா நில மோசடியில் ஈடுபட்டதாக குரு கிராம் காவல்துறை குற்றம் சாட்டியது. இதனால் அவருக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராபர்ட் வதேரா மீதும் அவரது நிறுவனம் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அவருக்கு சொந்தமான 43 சொத்துக்களும் முடக்கப்பட்டது.

அதாவது குரு கிராம் நில பேர வழக்கில் ராபர்ட் வதேரா மற்றும் அவரது நிறுவனங்களுடன் தொடர்புடைய ரூபாய் ஆறு கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 36 கோடி மதிப்பிலான 43 சத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.