உத்திரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் தில்கர் என்ற பகுதியில் ஓம்கர் கங்வார் (67) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஹர்ஷவர்தன் கங்வார் (32) என்ற மகன் இருந்துள்ளார். இதில் ஹர்ஷவர்தனுக்கு கஞ்சா மற்றும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இதனால் மது குடித்துவிட்டு கஞ்சா அடித்து விட்டு வீட்டிற்கு வந்து தன் தந்தையுடன் அடிக்கடி தகராறு செய்வார். இந்நிலையில் நேற்று முன்தினமும் அதே போன்று ஹர்ஷவர்தன் போதையில் வீட்டிற்கு வந்த நிலையில் தந்தை மகனுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபம் அடைந்த தந்தை தன் மகனை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து தந்தையை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.