டெல்லியின் உத்தம்நகர் மெட்ரோ நிலையத்தின் கீழ் பழ வியாபாரிகள் நிறைந்து நிற்கும் பகுதி. அங்கு பழம் வாங்க வந்த வாடிக்கையாளர்கள், தாங்கள் நல்ல பழங்களை எடுத்தோம் என்றும், சரியான எடை போடப்பட்டிருக்கிறது என்றும் நம்புகிறார்கள். ஆனால், இந்த நம்பிக்கையை தகர்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், ஒரு மாம்பழ வியாபாரி மிக புத்திசாலித்தனமாக இரண்டு பழுதுபட்ட பழங்களை தராசில் முதலில் வைக்கிறார். அதன் மேல் வாடிக்கையாளர் தேர்ந்தெடுத்த நல்ல பழங்களை மேலே வைக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by The Bhagwa Man🚩 (@thebhagwaman)

இதனால் தராசில் இருக்கும் பழங்கள் அனைத்தும் நல்லதுதான் என வாடிக்கையாளர் நம்புகிறார். ஆனால் உண்மையில், பழைய பழங்கள் கீழே வைத்து எடையை அதிகமாக்கி வாடிக்கையாளரை ஏமாற்றுகிறார்.

இந்த வீடியோவை @thebhagwaman என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பதிவிட்டுள்ளது. இதனை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து நெட்டிசன்களில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. “இது எனக்கும் இரண்டு முறை நடந்திருக்கிறது”, “நான் இப்போ மிக எச்சரிக்கையாக பழம் வாங்குறேன்” என பலர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.

இது போன்ற மோசடி விவகாரம், பல இடங்களில் நடக்கக்கூடியதென்றும், மக்கள் எடைக்குப் போடப்படும் பழங்களை கவனமாக பார்க்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் எச்சரிக்கின்றனர்.
நாம் எப்போதும் விழிப்புணர்வுடன் பழங்கள் எடைக்குப் போடப்படும்போது பார்த்து வாங்க வேண்டியது மிக அவசியம்.