மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், விவசாயி ஒருவரின் மாட்டு  கொட்டகையில் இருந்து ஒரே நேரத்தில் 60 சிறிய நாகப்பாம்புகள் வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவல் தெரிந்ததும், பாம்பு பிடிப்பாளர் ஒருவர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று அனைத்து பாம்புகளையும் பாதுகாப்பாக ஒரு பெட்டியில் பூட்டி வைத்தார். பின்பு அந்த பாம்புகளை அருகிலுள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தார். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த பாம்புகளும் எந்த ஆபத்தும் இல்லாமல் மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் பற்றிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வனத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக தெரிவித்ததாவது, “இது மத்திய இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நாகப்பாம்பு கூட்டமாகும்” என தெரிவித்துள்ளனர். மேலும், மொத்தம் 100க்கும் மேற்பட்ட பாம்புகள் குழியிலிருந்து வந்ததாகவும், அதில் 60 பாம்புகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.