கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் ஏமன் நாட்டில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் பிரியா வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு மயக்க ஊசி செலுத்தி கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் பிரியா மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபணம் ஆனது. எனவே இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பிரியாவுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். வருகிற 16-ஆம் தேதி பிரியாவுக்கு தூக்கு தண்டனை விதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவளித்தது.

இந்த நிலையில் பிரியாவை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என அவரது கணவர் முயற்சி செய்து வருகிறார். தூக்கு தண்டனை நெருங்கிய நிலையில் பிரியாவின் கணவர் டோமி தாமஸ் நிருபர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது, எனது மனைவி நிஷாவை மீட்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அதற்காக நான் பல்வேறு தரப்பில் முயற்சிகள் செய்து வருகிறேன். இதனை தொடர்ந்து நிஷாவின் தாயார் கவர்னருடன் வீடியோ கால் மூலம் பேசி உள்ளார். எனவே கவர்னர் பிரியாவை தூக்கு தண்டனையில் இருந்து மீட்பதற்காக முயற்சிகளை எடுத்து வருகிறார். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

வருகிற 14-ஆம் தேதிக்குள் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் என்னுடைய மனைவி பிரியாவை காப்பாற்றுவதற்கு பலரும் பணம் தர முன்வந்துள்ளனர். இறந்தவரின் குடும்பத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் ஒத்துழைத்தால் அவரது குடும்பத்திற்கு பண உதவியை பெற்று கொடுப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.