ஆந்திர மாநிலத்தில் வெங்கட்ரமணப்பா என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் சியாமளாவுக்கும் விஸ்வநாத் என்பவருக்கும் இடையே கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை சென்றது. இந்த நிலையில்தான் குடும்பத்தில் புயல் வீசத் தொடங்கியது.
அதாவது சியாமளாவின் இளைய சகோதரியுடன் விஸ்வநாத்துக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில் இந்த விவகாரம் மனைவிக்கு தெரிய வரவே அவர் தன் கணவனுடன் அடிக்கடி தகராறு செய்தார். இந்த பிரச்சினையால் வெங்கடரமணப்பா மற்றும் அவரது மனைவிக்கும் இடையே கூட பிரச்சினை எழுந்தது.
இந்நிலையில் திடீரென மாமியாரையும் மச்சினிச்சையும் அழைத்துக் கொண்டு அவர் 78 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றுவிட்டார். இதனால் பதறிய வெங்கட ரமணப்பா தன் மனைவியையும் மகளையும் காணவில்லை என தேடிய நிலையில் பின்னர் அவர்கள் மூவரும் ஒரே இடத்தில் இருந்தது தெரிய வந்தது.
அதாவது மாமியாரின் பெயரில் உள்ள சொத்தை விற்க முடிவு செய்து அவர்களை விஸ்வநாத் அழைத்து சென்ற நிலையில் இந்த விஷயம் வெங்கட ரமணப்பாவுக்கு தெரிய வரவே ஆத்திரத்தில் தன் மருமகனை கொலை செய்ய திட்டம் தீட்டி தன்னுடைய நண்பன் கடமய்யா என்பவரை தொடர்பு கொண்டு அவருக்கு நான்கு லட்ச ரூபாய் பணம் கொடுத்தார்.
பின்னர் அவர்கள் திட்டம் தீட்டி தன்னுடைய மருமகனை விவசாயம் செய்வதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் பணம் தருகிறேன் எனக் கூறி வெங்கட ரமணப்பா அழைத்துள்ளார். இதனை நம்பிய அவர் சென்ற நிலையில் கூலி ஆட்கள் மூன்று பேர் அவரை கொடூரமாக கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் கூலி ஆட்களை தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
