தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் கட்ச தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி 7 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததோடு ஒரு படகையும் சிறை பிடித்துள்ளனர். மேலும் தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
