உகாண்டாவின் மலைப் பகுதியில் சுற்றுலா சென்றிருந்த பெண் பயணி ஒருவருக்கும் சுற்றியிருந்த குரங்குகளுக்கும் இடையே ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘Mountain Gorillas’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்த வீடியோவில், அந்த பெண்ணின் தலைமுடியை ஒரு குரங்கு இழுத்து விளையாடுவது தெரிகிறது. இதைக் கண்டு மற்றொரு குரங்கு — பெண் குரங்காக இருக்கலாம்  என நினைத்து திடீரென நுழைந்து, தலைமுடி இழுத்த குரங்கிற்கு ஒரு சாய்ந்த அடியிட்டு, அவனை கையிலே இழுத்துச் சென்று விடுகிறது. இந்த சம்பவம் சுற்றியிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதைவிட, சிரிப்பில் ஆழ்த்தியது.

திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அந்த பெண் பயணியருக்கு ஏதுவும் நேரவில்லை. மாறாக, அவர் உடனே சிரித்துவிட்டார். அருகில் இருந்த சுற்றுலா பயணிகள் குழுவும் இந்த குரங்குகளின் நடத்தைக்கு ஆச்சரியமாகவும், சிரிப்புடனும் ரசித்தனர். மனிதர்களுக்கு இடையே நடக்கும் காதல், பொறாமை, வாதங்கள் போன்ற உணர்வுகள் வனவிலங்குகளுக்கும் இருக்கிறதா என்ற வினாவை இந்த காட்சி எழுப்பி உள்ளது.

வீடியோ வைரலாகியதன் பின்னர், சமூக வலைதளங்களில் மக்கள் கருத்துக்களை மழையாக பதிவு செய்து வருகின்றனர். “அது உண்மையாக ஆச்சரியம் தான்”, “அவளோட என்ட்ரி Oscar வாங்கும் அளவுக்கு இருந்துச்சு”, “அவங்கத் தான் என் கேர்ள் பிரெண்ட்” என்று பலரும் நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ளனர். மனிதர்களைப் போலவே உணர்வுகளை வெளிப்படுத்தும் விலங்குகளின் நடத்தை இந்த வீடியோவால் உலகம் முழுவதும் டிரெண்டாகி வருகிறது.