காஞ்சிபுரம் மாவட்டம் நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி துளசி. இந்த தம்பதியினருக்கு துரை (20) என்ற மகனும், 18 வயதில் மகளும் உள்ளனர். சுப்பிரமணியன் தம்பி துளசி ராமன் அதே பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறார்.

இவர்களது வீட்டிற்கு எதிரே உள்ள ஏரிக்கரையில் அரசு நிலத்தில் ஆடு, மாடு கட்ட கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சுப்பிரமணிக்கும் துளசிராமனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த அன்று துளசிராமனின் மனைவி சுமதிக்கும் சுப்பிரமணியின் மகன் துரை என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கோபத்தில் துரை சித்தி என பார்க்காமல் கத்தியால் சுமதியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த சுமதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுமதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய துரையை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.