சென்னை பள்ளிக்கரணை பகுதியில் ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 27 வயது பெண் அடிக்கடி செல்லும் நிலையில் தன்னுடைய குடும்ப பிரச்சினைகள் தொடர்பாக அங்கிருந்த பூசாரி அசோக் பாரதி என்பவரிடம் கூறியுள்ளார். இதனால் அசோக் பாரதி மற்றும் இளம்பெண் இருவரும் பழகி வந்த நிலையில் பூசாரி அந்த பெண்ணிடம் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க ருத்ராட்ச மாலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதற்காக அந்த பெண் பூசாரியுடன் வடபழனி கோவிலுக்கு செறன்ற நிலையில் தன்னுடைய உறவினர் ஒருவர் வீட்டிற்கு செல்லலாம் என பூசாரி அந்த இளம் பெண்ணை அழைத்து சென்று பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் ஆதி பாரதியும் அந்த பெண்ணுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது அவரது கணவர் அங்கு வந்து செல்போனில் அதனை படம் எடுத்து வைத்ததோடு தன்னை தாக்கி பத்து லட்ச ரூபாய் பணம் கேட்டும் மிரட்டுவதாக தனியாக புகார் கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.