
பிரேசில் நாட்டின் ரியோ கிராண்ட் டொ மாகாணத்தில் எஸ்டாகோ நகர் அமைந்துள்ளது. அப்பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு 16 வயது சிறுவன் ஒருவன் நேற்று சென்றிருந்தான். அவன் திடீரென ஒரு வகுப்பறைக்குள் நுழைந்த நிலையில் வகுப்பில் இருந்த ஆசிரியர் மற்றும் மாணவிகள் என 4 பேரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினான்.
அப்போது 9 வயது சிறுமியின் வயிற்றில் ஆழமாக கத்திக்குத்தி ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரை பள்ளியில் இருந்த சக ஆசிரியர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கத்தியுடன் பள்ளிக்குள் நுழைந்த 16 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக அந்த சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.