
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள பாகாபுரானா அருகே சமதாபாய் கிராமத்தில் நடந்த சாலை விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விபத்தில், வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளின் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த கொடூர விபத்தின் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
मोगा, पंजाब: बाघापुराना के गांव समाधभाई में दो तेज रफ्तार मोटरसाइकिलों की आमने-सामने की टक्कर का सीसीटीवी वीडियो वायरल. हादसे में तीन युवक गंभीर रूप से घायल हुए, जिन्हें स्थानीय लोगों की मदद से अस्पताल पहुंचाया गया.#Moga #Punjab #CCTVFootage #ATReel #AajTakSocial pic.twitter.com/Ccn9TUgzT3
— AajTak (@aajtak) July 7, 2025
விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த மூவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக சென்று உதவி செய்தனர். பின்னர் காயமடைந்தவர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம், சாலைகளில் வேகத்தைக் கட்டுப்படுத்தும் அவசியத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.