தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிற்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த ரோகித் என்ற 25 வயது இளைஞர், தனது வாழ்க்கை குறித்த மனவேதனையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. MSc பட்டத்தை முடித்த பின்னர் B.Ed படித்து வந்த ரோகித், சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்திருந்தார். ஆனால் அந்த கனவு நிறைவேறாத வேதனையே அவரை மனதளவில் பாதித்துள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்கொலைக்கு முன் ரோகித் எழுதிய கடிதம் ஒன்றில், “சிவா! உன்னுடைய ஞானம் அனைத்தும் இருந்தும் என்னுடைய விதியை இப்படித்தான் எழுதியாயா? உன் மகனுக்கும் இதே மாதிரி எழுதியிருப்பாயா? நாங்களும் உன் பிள்ளைகளே தானே?” என மனம் நொந்தக் கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும் “வாழ்வின் வேதனை மரணத்தின் வேதனையைவிட அதிகம். நான் பலமுறை முயற்சி செய்தேன், ஆனாலும் தோல்வி தான். இது தான் என் விதி” என எழுதியுள்ளார்.

அதன்பின், “நல்ல மனதுடன், புனிதமான உள்ளத்துடன் பலரை சந்தித்தேன். ஆனால் மற்றவர்களை பற்றி மறந்துவிட்டாலே நலமாய் இருக்கும்” என பதிவிட்டுள்ளார். ரோகித் தொடர்ந்து தனது வாழ்க்கை பற்றி நெருக்கடியோடும், மன அழுத்தத்துடனும் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இளைஞரின் உயிரிழப்புக்கே காரணமான சூழ்நிலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம், இன்றைய இளைஞர்கள் மத்தியில் மனநல பிரச்சனைகள் குறித்த கவலையை எழுப்பியுள்ளது.