
பாமக எம்எல்ஏ அருளின் பேச்சு தற்போது பாமக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பாமகவின் எம்.எல்.ஏ. திரு.அருள், சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உருக்கமாக பேசும்போது, “இன்று நான் வெள்ளை சட்டை போட்டிருப்பதற்கும், காரில் வந்திருப்பதற்கும், அனைத்து பதவிகளுக்கும் காரணம் மருத்துவர் ஐயா தான். அவரை ஒருநிமிடமாவது மறந்தோம்னா நம்ம இனமே அழிந்து போயிடும்,” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
“அப்பல்லோ மருத்துவமனை கட்டிய ரெட்டிசாமி மாதிரி, நம்ம மருத்துவர் ஐயாவும் ஒருத்தரா இருந்திருக்கலாம். ஆனால் இன்று ஊருக்கு ஊர் மருத்துவர்கள் இருக்க காரணம், அவர் கொடுத்த இடஒதுக்கீடு. என் வீட்ல 4 பேர் டாக்டராக இருக்க காரணம் அவர்தான். நான் போட்டிருக்கும் வெள்ளை சட்டையும், நான் வந்த காரும் எனது தம்பி வாங்கித் தந்தது போல தெரிந்தாலும், அதற்குப் பின்னால் காரணம் என் தெய்வம் போல இருக்கிற மருத்துவர் ஐயா தான்.”
இது தொடர்பாக அருள் கூறியதாவது, “எனக்கு மேயர் சீட், எம்.எல்.ஏ. சீட், மாவட்டச் செயலாளர் பதவி, இப்போது இணை பொது செயலாளர் பதவியெல்லாம் கொடுத்தவரும் ஐயாதான். ஆனால் அவருக்கு பதவியெல்லாம் முக்கியமில்லை. அவர் நோக்கமோ ஒரே ஒன்று – இடஒதுக்கீடு. அந்த இடஒதுக்கீட்டுக்காகவே இன்றும் உழைத்து கொண்டிருக்கிறார்.
“என்னை கட்சியிலிருந்து நீக்கப்லாம், பொறுப்புகள் மாற்றப்படலாம் என்று சிலர் பேசுறாங்க. ஆனால் அதில் எனக்கு வருத்தம் கிடையாது. என்னை நீக்க அதிகாரம் இருக்குற ஒரே தலைவர் மருத்துவர் ஐயா தான். அவர் இப்ப ‘உன் உயிர் எனக்கு வேணும்’ என்று சொன்னாலும், இந்த டிவிக்காரர்கள் முன்னாலே என் கழுத்தை அறுத்து சாக தயாரா இருக்கிறேன்” என்றார் அருள்.
அவரது உரை மேடையில் இருந்த தொண்டர்களை மட்டுமல்ல, திரையில் பார்த்தவர்கள் பலரையும் உணர்ச்சியடைய செய்தது. “என் உயிர் முழுதும், என் குடும்பம் முழுவதும் அவருக்கே” என்ற உருக்கமான வார்த்தைகள், அவரது தலைவருக்கான ஈடுபாடை வெளிப்படுத்தியது.
மேலும் இந்த பேச்சு, பாமக வட்டாரத்தில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.