அரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவனுடன் வசித்து வருகிறார். இந்தப் பெண் கடந்த மாதம் 24 ஆம் தேதி தன்னுடைய கணவனுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு கோபத்தில் வெளியேறிவிட்டார். தன் மனைவி மீது உள்ள கோபத்தால் கணவனும் அவரை தேடாமல் இருந்த நிலையில் இரண்டு நாட்கள் ஆகியும் வீட்டிற்கு வராததால் பின்னர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதாவது இதற்கு முன்பும் இப்படி சண்டை போட்டுவிட்டு அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் பின்னர் தானாகவே வீட்டிற்கு வந்து விடுவார் என்பதால் அவர் தேடாமல் இருந்த நிலையில் இரண்டு நாட்கள் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் கடந்த 26 ஆம் தேதி புகார் கொடுத்தார்.

அந்த புகாரின்படி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவரது மனைவி கால் துண்டான நிலையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதாவது பானிபட் ரயில்வே நிலையம் அருகே அந்த பெண் மிகவும் சோகமாக சம்பவ நாளில் அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒருவர் கணவனுக்கு தெரிந்தவர் எனக் கூறி அந்த பெண்ணிடம் அறிமுகமான நிலையில் பின்னர் ஒரு காலி ரயில் பெட்டிக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அங்கு இன்னும் 2 பேர் வந்த நிலையில் அவர்களும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு ஒரு ரயில்வே தண்டவாளத்தில் போட்ட நிலையில் அங்கு வந்த ரயில் அந்த பெண்ணின் கால்களில் ஏறி இறங்க கால் துண்டானது தெரியவந்தது.

இந்த கொடூர சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த பெண்ணை சீரழித்த காட்டுமிராண்டிகளை போலீசார்‌ வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பெண் தீராத வேதனையோடு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.