அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்காவில் நடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓய்வு பெற்ற இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா பகிர்ந்த வீடியோவில் ஒரு வனத்துறை வாகனத்தை நோக்கி குட்டியானை உதவி கேட்டு ஓடிவரும் உணர்ச்சிகரமான காட்சிகள் பதிவாகியுள்ளது.

தனது தாயை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக குட்டியானை வனத்துறை வாகனத்தை சுற்றி சுற்றி வந்தது. குட்டி தனது தாயை பிரிந்ததை அறிந்த வனத்துறை குழுவினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு குட்டியை அதன் தாயுடன் சேர்த்தனர். பின்னர் தாய் யானையும் குட்டி அணையும் ஒன்றாக காட்டுக்குள் சென்றது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.