
பீகார் மாநிலத்தில் உள்ள பூர்ணிமா பகுதியில் கடந்த சில நாட்களாக சிலர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாபுலால் ஒரான், சீதாதேவி, ராணியாதேவி, மஞ்சித் ஒரான், டாப்டோமொஸ்மாத் ஆகியோர் தான் காரணம் என அந்த கிராம மக்கள் நம்பி உள்ளனர். அதாவது இவர்கள் பில்லி சூனியம் செய்ததால் தான் அவர்கள் இறந்ததாக கிராம மக்கள் தவறாக நினைத்துள்ளனர்.
இதன் காரணமாக நேற்று முன்தினம் அந்த கிராம மக்கள் அவர்களது வீட்டிற்குள் நுழைந்து அவர்களை கொடூரமாக அடித்தனர். அதோடு அவர்களை ஆத்திரமடங்காமல் உயிரோடு எரித்து துடிக்க துடிக்க கொன்றனர். இந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை எப்படியோ அவர்களிடம் இருந்து உயிர்பிழைத்து போலீசாரிடம் நடந்த சம்பவங்களை கூறியது.
குழந்தையால் மேற்கொண்டு விவரிக்க முடியாத நிலையில் குடும்பத்தினர் உயிரிழந்த துயரத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கிறது. அந்த குழந்தையின் புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கிராமத்தை சேர்ந்தவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை ரோந்து பணியின் மூலம் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கிராம மக்களை தூண்டி வட்ட நவீன் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.