
உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான ரஷ்யாவில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. தற்போது ரஷ்யா உக்ரைனுடன் போர் செய்து வரும் நிலையில் 2 லட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துவிட்டனர். அதன்பிறகு ஏராளமானோர் ரஷ்யாவை விட்டு வெளியேறும் நிலையில் தொடர்ந்து மக்கள் தொகை விகிதமும் குறைந்து வருவதால் அங்கு இதனால் பெரும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக அதிபர் புதின் மக்கள் தொகையை உயர்த்துவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அந்த நாடுகளில் கருக்கலைப்புக்கு கடும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பள்ளி மாணவிகளும் குழந்தை பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அதிபர் புதின் அரசு அறிவித்துள்ளது. அதாவது டீன் ஏஜ் கர்ப்பம் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போது இதற்கு 43 சதவீதம் பேர் ஆதரவு கொடுத்து நிலையில் 40% பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் பெரும்பான்மையாக 3% வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளதால் தற்போது பள்ளி மாணவிகளும் குழந்தை பெற்றுக்கொள்ள ரஷ்ய அரசு ஊக்கப்படுத்துவதோடு அவர்களுக்கு பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்டாலின் ஆட்சி காலத்தில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ரஷ்யா பதக்கங்கள் வழங்குவது போன்று தற்போதும் அதுபோன்று வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாம்.
மேலும் 2050 ஆம் ஆண்டுக்குள் உலகின் 75 சதவீத நாடுகள் மக்கள் தொகை குறைவு தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆய்வுகள் வெளிவந்துள்ளது.