
இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்தியா 366 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.
இந்த அபார வெற்றிக்கு ஆகாஷ் தீப்பின் பந்துவீச்சும் காரணமாகும். இவர் தனது திறமையான பந்துவீச்சால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது ஆகாஷ் கூறியதாவது, புற்றுநோயால் தனது சகோதரி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்காக இந்த வெற்றியை அர்ப்பணிப்பதாகவும் மிகுந்த எமோஷனலாக பேசியுள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆகாஷின் சகோதரி கூறியதாவது, ஆகாஷ் இந்தியாவிற்காக 10 விக்கெட்டுகள் வீழ்த்தியது மிகவும் பெருமை படக்கூடிய விஷயமாகும்.
அவர் எனக்காக இந்த வெற்றியை அர்ப்பணிப்பார் என்பது எனக்கு தெரியாது. அவர் எப்போதெல்லாம் விக்கெட் வீழ்த்துகிறாரோ அப்போதெல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக சத்தமாக வீட்டில் கொண்டாடுவோம்.
அவர் எனக்காக இந்த வெற்றியை அர்ப்பணித்தது எவ்வளவு பெரிய விஷயம். இது எங்களுடைய குடும்பத்தின் மீதும் என் மீதும் அவர் எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பதை வெளிக்காட்டி உள்ளது என உணர்ச்சிவசமாக பேசினார்.