தனது 44 வது பிறந்த நாளை கொண்டாடும் எம்.எஸ் தோனி தனது குழந்தை பருவ காதலியின் பெயரை வெளிப்படுத்திய நகைச்சுவையான சம்பவம் ஒன்றை நினைவு கூர்வோம். அதாவது 2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியில் தோனி கலந்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் மேஜிக் கலைஞர் ஒருவர் தோனியின் முதல் காதலியின் பெயரை யூகிக்க முயற்சி செய்தார்.

அந்தப் பெயரில் “A ” என்ற எழுத்து உள்ளது என்று கூறினார். அப்போது தோனி எல்லா பெண் பெயரிலும் “A ” இருக்கும் என்று தெரிவித்தார். பிறகு தோனி தனது குழந்தை பருவ காதலியின் பெயரை வெளிப்படுத்தினார். அவரது பெயர் சுவாதி என்று கூறினார். ஆனால் என் மனைவியிடம் இதை சொல்லி விடாதீர்கள் சரியா என்று தோனி சிரித்துக்கொண்டே கூறினார். இந்த சம்பவம் தோனியின் விளையாட்டுத்தனமான முகத்தை வெளிப்படுத்தியது. இந்த சம்பவத்தை இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அனைவரும் நினைவு கூர்வோம்.