மராட்டிய மாநிலம் கோவண்டி பகுதியில் ஜீஷன் ஷேக் (19) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருடைய நெருங்கிய நண்பர் ஷாகின் ஷேக் (16). கடந்த ஜூன் 30-ம் தேதி ஜீவன் ஷேக் தன்னுடைய நண்பர் ஷாகின் ஷேக்கிடம் தன் வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். அதன்படி ஷாகினும் அவரது வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் திடீரென அவர்கள் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஷாகின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக ஜீஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் கண்விழித்த ஜீஷன் காவல்துறையினரிடம் தானும் எனது நண்பரும் ஒரு குளிர்பானத்தை குடித்ததால் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது என்று கூறினார்.

ஆனால் அவர் கூறியதில் காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஷாகினின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் குடித்த பாலில் விஷம் கலந்திருந்ததால் உயிரிழந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஜீஷனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் உண்மையை கூறினார்.

அப்போது “சமீபகாலமாக ஸ்டாலின் தன்னை ஏமாற்றி வந்ததாகவும், என்னிடம் பேசாமல் இருந்ததால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன் என்றும், அதற்காக பாலில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்தேன்” என்று கூறினார். இவர் கூறியதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜீஷனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.