
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளிக்கரையை அடுத்துள்ள ஓட்டக்குடியை சேர்ந்த தம்பதியினர் பிரபாகரன்- சுஜாதா (33). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பிரபாகரன் துபாயில் வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் அடிக்கடி செல்போன் மூலமாகவே சண்டை போட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ நாளன்று வழக்கம் போல ஏற்பட்ட சண்டையில் சுஜாதா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். எனவே வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தனது உடலில் மன்னனையை ஊற்றி தீ வைத்துக் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுஜாதா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சுஜாதாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.