சட்டமன்ற தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி முதலில் கோயம்புத்தூரில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இன்று காலை 9 மணி அளவில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பிரச்சார வாகனத்தில் சென்று விவசாயிகளையும், பொது மக்களையும் சந்தித்து உரையாற்ற உள்ளார்.

பின்னர் பிளாக் தண்டர் முதல் ஊட்டி சாலை காந்தி சிலை வரை ரோடு ஷோவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டணி ஆட்சி அமையப்போகிறது என்று அமித்ஷா கூறுகிறார். ஆனால் அது குறித்து பழனிச்சாமிடம் இருந்து இதுவரை எந்த ஒரு உறுதியான பதிலும் வரவில்லை” என்று கூறினார்.