
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோவுக்காக வித்தியாசமான ஆனால் உயிருக்கு ஆபத்தான சாகசங்களை மேற்கொள்ளும் இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். இந்நிலையில், சண்டிகர் சுக்னா ஏரியில் 20 அடி உயரத்திலிருந்து விழுந்து காயம் அடைந்த இளைஞரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கருப்பு சட்டை மற்றும் வெள்ளை பேண்ட் அணிந்திருந்த இளைஞர், ஏரியின் பாதுகாப்புச்சுவரின் மேல் பாய முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுகிறார். கீழே பாறைகளுடன் சிக்கியதால் அவரது தலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னுடன் இருந்த நண்பர்கள் வீடியோ படம் பிடித்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மயக்க நிலையில் ஏரியில் விழுந்த இளைஞரை சுற்றுலா பயணிகள் தன்னார்வமாக நீரில் இறங்கி மீட்டுள்ளனர்.
View this post on Instagram
இதுகுறித்து சண்டிகர் டிஎஸ்பி உதய்பால் கூறியதாவது, “இவ்விதமான வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார். இது குறித்து இணையத்தில் பலரும் விமர்சனம் தெரிவித்துள்ளனர். ஒருவர், “மீண்டும் இதுபோன்ற சாகசம் செய்யாதீர்கள் – வாழ்க்கையை வீணாக்க வேண்டாம்” என கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், “ஹீரோபந்தி போச்சு.. தலையில் ரொம்ப காயம் அடிச்சிருப்பான் போலிருக்கு”, “பயந்து பாக்குற வீடியோ தான் இது.. ஆனால் பெற்றோர் பார்த்தால் என்ன நிலை?”, “மகனிடம் எதுவும் சொல்ல முடியாமல் சோகிக்கும் ஒரு அம்மாவின் கண்களில் நீர்” என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இளைஞர்களின் இந்த ‘ரீல்ஸ் வெறி’ அவர்களது வாழ்கையை கேள்விக்குறியாக மாற்றும் நிலைக்கு வருவதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.