சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அதிர்ச்சிக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் வாலிபர் ஒருவர் ரயிலின் படியில் நின்று கொண்டு சாகசம் செய்கிறார். அந்த ரயில், ரயில் நிலையத்தை அடையும் வரை அவர் இந்த சாகசத்தை மேற்கொள்கிறார். அப்போது அவர் தனது கால்களை தரையில் வைத்து ஓடுகிறார். அதன்பின் ரயில் நிலையம் வருகிறது. அதிலும் அவர் தனது கால்களை கீழே வைத்து ரயிலின் கம்பியை பிடித்தவாறு சாகசம் செய்கிறார்.

 

இதையடுத்து அவர் சமநிலையை இழந்து உடனடியாக அவர் ரயிலின் தண்டவாளத்திற்குள் இழுத்துச் செல்லப்படுகிறார். இது தொடர்பான வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பது தொடர்பாக தெளிவான தகவல்கள் வெளிவரவில்லை. வீடியோவின் உண்மைத்தன்மையும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இருப்பினும், சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது. ரெயிலில் ஸ்டண்ட் செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.