
ரஷ்ய அரசு பள்ளி மாணவிகள் கர்ப்பமானால் ஒரு லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் மக்கள் தொகையில் பெரிய சரிவு ஏற்பட்டதால் முதலில் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா முன்னதாக கர்ப்பிணி பெண்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை தொடங்கியது.
இந்த திட்டத்தால் பெரியவர்கள் மட்டுமே பயன் அடைந்ததால் தற்போது பள்ளி மாணவிகளுக்கும் புதிய கொள்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. 43 சதவீதம் பேர் ரஷ்யாவின் புதிய கொள்கையை ஆதரித்துள்ளனர். 40% பேர் எதிர்த்துள்ளனர். போரில் 2,50,000 ரஷ்ய வீரர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இளம் ரஷியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது. கருக்கலைப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது 2050-ஆம் ஆண்டுக்குள் உலகின் 75 சதவீத நாடுகள் மக்கள் தொகை நெருக்கடியை எதிர்கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.