கே.ஹெச் குழுமத் தலைவரும், தோல் தொழிற்சாலைகளின் முன்னோடியுமாண முகமது ஷாஹிம் சாஹிப் என்பவர் காலமானார். தமிழகத்தில் தோல் பதனிடும் தொழில்துறையின் பிதாமகனாக விளங்கி பல பேருக்கு வேலை வாய்ப்பு அளித்ததோடு இஸ்லாமிய மக்களின் மரியாதையை பெற்ற உன்னத மனிதரின் இழப்பு வருத்தம் அளிக்கிறது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மேல்விஷாரம் பகுதி மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார். மேலும் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அமைச்சர் காந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.