இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் ஒரு சிறுவன், தனது தம்பியை சாலையில் அழைத்துச் செல்கிறார். அப்போது அந்த சிறுவன் தனது தம்பியின் மீது ஒரு போர்வையை போட்டு, தலையில் கை வைத்து கூட்டிச் செல்கிறார். தனது தம்பியின் பின்னால் இந்த சிறுவன் செல்கிறார். அப்போது அங்கு தெரு நாய் ஒன்று வருகிறது. இதனை பார்த்த அந்த தெரு நாய் அவர்களை பின்தொடர முயற்சி செய்கிறது.

அப்போது அந்தச் சிறுவன் தனது கால்களால் அதை எட்டி உதைக்க முயற்சி செய்கிறார். இதை அடுத்து அந்த தெரு நாய் அங்கிருந்து செல்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.